Tuesday, June 23, 2009

தோனியின் புலம்பல்

ஐயோ....
இப்பத்தான் நாம தோத்துப்போனதுக்கு மன்னிப்பு கேட்டோம், அதுக்குள்ளே அடுத்த சோதனை வந்துருச்சே.... இந்த நேரம் பாத்து நம்ம பங்காளி வேற ஜெயிச்சு தொலைஞ்சுட்டாங்களே. இதுக்கு வேற மறுபடியும் மன்னிப்பு கேட்கணுமே. இறைவா!....
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....

Thursday, June 18, 2009

தோனி Vs கேரி

கேரி யு ஆர் ரைட்
ஐ.பீ.எல் பந்தயங்களில் தொடர்ந்து விளையாடியதால் இந்திய வீரர்கள் சோர்வடைந்து விட்டார்கள். இதுதான் கேரி கிர்ஸ்டனின் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணம் குறித்த கருத்து. கேரி ஏதோ சொல்லப்போய், வந்தது வினை. எதுடா சாக்கு என்று கிளம்பி வந்து விட்டார்கள் பத்திரிகையாளர்கள். வெறும் வாயை மெல்பவர்களுக்கு வெற்றிலை பாக்கோடு சுண்ணாம்பையும் தடவித்தந்தால் விடுவார்களா? அப்படித்தான் ஆனது கேரி Vs தோனி கதை. கேரி ஒன்று சொல்ல, தோனி அதை மறுத்து பேச, ஒரே களேபரம். இது தானே நமக்கு சுவாரஸ்யம். மற்றபடி இந்தியா ஜெயித்தால் என்ன? தோற்றால் நமக்கு என்ன?
சரி, கேரி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? விளையாட்டு வீரர்கள் சோர்வடைய மாட்டார்களா? அவர்கள் பணத்தை கொட்டினால் விளையாடத்தயாராக இருக்கலாம். BCCI சோர்வடையாமல் கோடிகளை அள்ளி கொட்டிகொள்ளும் இயந்திரமாக இருக்கலாம், ஆனால் வீரர்கள் இயந்திரம் அல்லவே. மனிதர்கள் தானே. உடனே தில்ஷான், காலிஸ், டிவிலியர்ஸ், கைல் இவர்களெல்லாம் விளையாட வில்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் காலரியில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் சில ஈனப்பிறவிகள். ஒரு பேச்சுக்காக கணக்கிட்டு பார்ப்போம். ஐ. பீ.எல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் உலகக்கோப்பையில் விளையாடுகிறார்கள்? அதேபோல் மற்ற நாட்டு வீரர்களுள் எத்தனை பேர் அந்தந்த நாட்டுக்காக விளையாடுகிறார்கள்? இந்தியாவுக்காக விளையாடும் அத்தனை பேருமே ஐ.பீ.எல் போட்டியில் அயராமல் விளையாடியவர்கள். இனிமேலும் கோடிகளுக்காக ஆசைப்பட்டு கொண்டு போட்டிகளில் விளையாடினால் இந்த தோல்விகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். BCCI என்ற முதலையின் பேராசை ஒழிந்தால்தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் தொடரும்.
தோல்விக்கு தோனி மன்னிப்பு கோர வேண்டுமா?
இது பெரிய வேடிக்கையாக இருக்கிறது. தோனியின் இந்த மன்னிப்பு கோரிக்கை அவரது சொத்துக்களை ரசிகர்களின் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் உதவலாம். மற்றபடி மன்னிப்பு கேட்பது விளையாட்டில் ஏற்படும் தோல்விகளுக்கு அவசியமே இல்லை. கேப்டன் விளையாட்டு மைதானத்தில் சில தவறுகள் செய்யலாம். ஒருவர் செய்யும் தவறிலும், சரியிலும்தான் விளையாட்டில் சுவாரஸ்யமே ஏற்படுகிறது. தவறே செய்யாமல் விளையாட வேண்டும் என்றால் மனிதர்களுக்கு பதிலாக, ரோபோக்களை வைத்துக்கொண்டு விளையாடலாம். இந்த அடிப்படை கூட தெரியாதவர்கள் விளையாட்டை பார்க்கத்தேவையிலை. கம்பியூட்டர் முன் அமர்ந்து செஸ் விளையாடலாம். மிஸ்டர் கூல், என்று பெயர் பெற்ற தோனி மன்னிப்பு கேட்டார் என்பது, அவர் மிஸ்டர் ஹாட் ஆகிவிட்டார் என்பதையே காட்டுகிறது. அவரை மிஸ்டர் ஹாட்டாக ஆக்கிய பெருமை, BCCI, பத்திரிகைகள் மற்றும் முட்டாள் ரசிகர்களையுமே சேரும்.