தோ, படத்துல பாக்குறீங்களே அதுதான் ரெங்குடு, அந்த மெஸ்ஸுதான் ராக்காயி மெஸ்ஸு.........
அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க? அதனால உண்மைய சொல்லிடறேன். இந்த மாதிரி மெஸ்ஸு இருக்கணும்னு எனக்கு ஆசைதான். ஆனா எண்பத்தி நாலாம் வருஷத்துல, அதுவும் திருவொத்தியூர்ல ஐந்நூறு ரூபா ஸ்டைபண்டுல இந்த மாதிரியெல்லாம் முடியுமா. ஒரு மாசம் சாப்பிட்டா இருநூத்தி எண்பது ரூபா தான் ஆகும். அதுதான் ராக்காயி மெஸ்ஸு.
காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூ வில் ஈஸ்வரன் கம்பெனியில் வேலை கிடைச்ச வுடனேயே ஒரு பெட்டியும், பாய் படுக்கையும் தூக்கிக்கொண்டு, நான், லட்சுமி நாராயணன், கொங்கு நாட்டு வேந்தன் (ரவி சந்திரனுக்கு நாங்கள் வைத்த பட்ட பெயர்) மூவரும் ராத்திரி திருவள்ளுவர் பேருந்தில் புறப்பட்டு போய், விடிந்ததும், விடியாததுமாய் ஈஸ்வரன் கம்பெனிக்கு போய்ச்சேர்ந்தோம். தூங்கி வழிந்த மூஞ்சியுடன் வந்த எங்களை இனிய ? முகத்தோடு வரவேற்ற கம்பெனியின் டிசைன் டிபார்ட்மென்ட் தலைவர் கிருஷ்ணமூர்த்தி எங்களுக்கு தங்க ஏற்பாடு செய்து தருமாறு சக ஊழியர்களை கேட்க, ஒரு வழியாக திருவொத்தியூரில் ராஜேஸ்வரி ஓட்டலில் வந்து ஐக்கியமானோம். அன்று முதல் எங்களுக்கு போஜன சேவை செய்தது ராக்காயி மெஸ். காலையில் இரண்டு இட்டலி, வடைகறி, ஒரு செட் பூரி. 'இன்னும் ரெண்டு வைக்காட்டா?' என்ற கேள்வியில் ராக்காயி அக்காவின் பரிவு, மூக்கை சிந்திய கையோடு இட்டலிகளை நமக்கு பரிமாறும் அழகு, வடை மாவை அரைத்து கொண்டிருக்கும்போதே, மாவை லேசாக நக்கிவிட்டுப் போகும் ஜிம்மி (தொத்த நாய்) என்று தினம், தினம் கொண்டாட்டம்தான். இரண்டு மாதத்தில் ராக்காயி மெஸ் போரடித்துப்போகவே தேவி மெஸ்ஸில் புது அக்கவுண்ட் ஓபன் பண்ணினோம். தேவி மெஸ்ஸில் கொஞ்சம் டீசென்ட்டாக இருக்கும். ஆனால் தரையில்தான் உட்க்கார்ந்து சாப்பிடவேண்டும், டேபிள் கிடையாது. சம்மணம் போட்டு முட்டை தோசைக்காக காத்திருக்கும்போது, "தேனா..... தம்பிங்களுக்கு முட்டை தோசை வையி" என்று தேவி அக்கா ஆர்டர் செய்ததும், சற்று நேரத்தில் அருகில் உட்க்கார்ந்துள்ள வெங்கடேஸ்வரனின் சம்மணம் போட்ட தொடை ஆடத்துவங்கும். உடனே 'தேனா' வருவதை உணர்ந்து கொள்வோம்.('தேனா', சுமார் பதினாறு வயது தேவதை) தலையை தூக்கினால் தரும-அடி விழும் என்பதால் கடைசிவரை, கால் கொலுசையே பார்த்து ஜொள்ளு விடுவோம். தேவி மெஸ்ஸில் மதிய உணவு கிடையாது என்பதால், ஞாயிற்று கிழமை மதிய உணவு மீண்டும் ராக்காயி மெஸ்ஸில். ஒரு முறை சாப்பிடும்போது வாய்க்குள் ஏதோ நெருட, எடுத்து பார்த்தேன். நாலு செ.மீ. நீளத்தில் ஒரு செத்துப்போன தேள். பார்த்த வுடன் குமட்டிக்கொண்டு வர அடித்து புரண்டு ஓடி வந்தேன். அன்றோடு ராக்காயி மெஸ்சுக்கு ஒரு பெரிய முழுக்கு போட்டேன்.

(தொடரும்)