Sunday, April 10, 2011

ம்ஹூம்... தேர்தல் பெருமூச்சு!



ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்... குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.ஆனால்... இன்று..அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போககையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள். மீண்டும் உங்கள் நினைவிற்கு..குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,ஓட்டுக்கு பணம் கிடையாது.டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .கரண்ட் கட் கிடையாது.இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது. -இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. -TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன. இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு) அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.


நம் மாநிலத்தின் நிலை??

Thursday, March 10, 2011

அரசியல் கடி

தொண்டர் 1: தலைவர் இப்படி ஜேப்படி திருட்டு செஞ்சு ஜெயிலுக்கு போவாருன்னு நான் நினைக்கவே இல்லை.
தொண்டர் 2: ஊழல் வழக்கிலே கம்பி எண்ணாம இருக்கணும்னா ஒரு தடவை ஜெயிலுக்கு போகணும்னு குடும்ப ஜோசியர் சொல்லிட்டாராம். அதுக்காக இப்படியா!!!

Wednesday, January 5, 2011

காவிரி சுழல் - தலை சுத்துதா.........?????

சுழல் மாட்டிகிட்டா என்ன ஆகும் தெரியுமா? பாருங்க...

Sunday, December 5, 2010

ஒரு விளம்பரம் ....சும்மா வெவ்வேவ்வேவே..

"கண்ணா...விக்கி லீக்சால மானம் கப்பலேறி போச்சா?
கவலைப்படாதே.... M-சீல் தடவு, பலமாக ஒட்டு.
மானத்தை பத்திரமா பாத்துக்க...

ஹா...ஹா...ஹா............

ஆசாமி: ஏதோ...நேரு ரேடியோவாமே... அந்த ரேடியோ இருக்கா?

கடைக்காரர்: இன்னாது, நேரு ரேடியோவா?

ஆசாமி: அட, அதாங்க ரகசிய உரையாடலெல்லாம் வெளிய வருதுன்னு சுப்ரமணிய சாமிகூட சொன்னாரே...அந்த ரேடியோ.
கடைக்காரர்: யோவ்..அது நேரு ரேடியோ இல்ல. நீரா ராடியா...

சுப்புணி: டேய்... கோண்டு, மாமா ஏன் ரொம்ப கவலையாய் இருக்கார்?

கோண்டு: அதோன்னுமில்லடா சுப்புணி, மாமா நேத்து, பக்கத்தாத்து மாமியிண்ட ஜொள்ளு விட்டுண்டிருந்ததை 'விக்கி லீக்ஸ்'ல வீடியோவா போட்டுட்டாளாம். அதான் என்ன நடக்குமோன்னு நடுங்கிண்டிருக்கார்.