ராக்காயி மெஸ்ஸுக்கு முழுக்கு போட்டாலும் சாப்பாட்டு பிரச்சினைக்கு அவ்வளவு ஈசியா தீர்வு வராது. அதனால் முடிந்த போது (ஸ்டய்பெண்டு வாங்கியதுலேர்ந்து ஐந்தாறு நாட்கள் வரை) உடுப்பி கிருஷ்ணா பவன், உமையாள் கபே, தேனா (தேவி) மெஸ்ஸு என்று படைஎடுப்பேன், பிறகு மீண்டும் ஏதாவது ஒரு மெஸ்ஸில் வந்து ஐக்கியம் ஆவேன். திருவொத்தியூர் கடற்கரை அருகில் இருந்ததால் பெரும் புயல் வீசினால் சோத்துக்கு திண்டாட்டம்தான். மெஸ்ஸுக்கு லீவு விட்டு விடுவார்கள். நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த தினம், அன்று திருவொத்தியூர் முழுக்க கலவரமாக, கடைகளை எல்லாம் மூடி விட்டார்கள். ராக்காயி மெஸ்ஸில் மட்டும் பின்புறக்கதவு வழியாக பழைய சாதம் ஒரு தட்டு ஒண்ணரை ரூபாய்க்கு விற்றார்கள். பசியில் பழைய சாதம் பஞ்சாமிருதம் போல் சுவைத்தது. சில சமயங்களில் வயிற்றுக்கு உணவு இல்லாத போது, செவிக்கு விருந்து படைப்போம். எப்படி என்றால் ரூம் விளக்கை அணைத்து விட்டு மெழுகு வத்தியை கொளுத்தி வைத்து சுற்றி உட்கார்ந்து கொண்டு, "தோல்வி நிலையென நினைத்தால்" பாடலில் ஆரம்பித்து "பளிங்குனால் ஒரு மாளிகை" வரை பாடி ஒரு இசை கச்சேரியே நடத்தி முடிப்போம்.
எங்கள் ரூமில் 'லட்சுமி நாராயணன்' மட்டும் இதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டான். அவனுக்கு ஒன்பது மணி அடித்தால் தூக்கம் வந்து விடும். அதே போல் கடிகாரம் அலாரம் அடித்தால் விழிப்பு வந்துவிடும். 'சடக்' என்று கடிகாரத்தை தட்டி விட்டு துண்டை (டவல்) எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்கு ஓடி விடுவான். எங்களுக்கு அவனை சீண்டி பார்ப்பதில் பேரானந்தம். அவன் நன்றாக தூங்கிய பிறகு கடிகாரத்தில் பதினொரு மணிக்கு அலாரத்தை செட் பண்ணி விட்டு விளக்கை அணைத்து படுத்து தூங்குவது போல பாவனை செய்வோம். வழக்கம் போல அலாரம் அடித்த வுடன் அவன் எழுந்து கடிகாரத்தை தட்டி விட்டு துண்டை கட்டி கொண்டு நேராக குளிக்க போய்விடுவான். சிறிது நேரத்துக்கு பிறகுதான் அவனுக்கு விஷயமே விளங்கும். அவன் திரும்பி வரும்போதும், நாங்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடி கொண்டிருப்போம். தூக்கத்திலேயே கொஞ்ச நேரம் புலம்பி விட்டு மீண்டும் தூங்க போய்விடுவான். நாங்கள் சீட்டு விளையாட்டை முடித்து விட்டு ரூமை விட்டு வெளியில் வந்து ஆளுக்கு ஒரு பால் வாங்கி குடித்து விட்டு மீண்டும் வந்து விளையாட்டை துவங்குவோம்.
பாட்டு கச்சேரியை ரோட்டில் செய்தால் என்ன ஆகும்?
என்ன ஆகும் என்பதை "ஆத்தாடி பாவாட காத்தாட" என்று பாடிய விஸ்வேஸ்வரனை கேட்டால் தெரிந்து விடும். விரைவில் தெரிந்து கொள்வோம்.
(டெலிபோன் லயனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக 'ராக்காயி மெஸ்' நிகழ்ச்சிகளை எழுத முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)

(தொடரும்)
No comments:
Post a Comment