"ஜெயா டி.வி" யில் சோவின் "எங்கே பிராமணன்-பாகம்-2" பார்த்தீர்களா?
உண்மையான பிராமணனை, உண்மையாகவே தேடிப்பார்த்து களைத்துப்போய் விட்டாரோ சோ? வேறு வழியில்லாமல் அய்யராத்து பாஷை சுட்டுப்போட்டாலும் வராதவர்களை பேச வைத்திருக்கிறார்கள் சோவும், வெங்கட்டும். "ஆத்துக்கு போ" என்பதைத்தவிர ஒரு வார்த்தை கூட வரவில்லை அவர்களுக்கு. திடீரென்று "இன்னாத்துக்கு" என்றெல்லாம் பேசுவது ஒரே காமடி. சோ- சீரியசான விஷயங்களை தெளிவாக சொல்கிறார், சரி-ஆனால் எதிரே அமர்ந்திருப்பவர் 'லூஸ் மோகன்' ஸ்டையிலில் கேள்விகளை கேட்பது எடு படவில்லை. பார்ப்பவர்களுக்கு சீரியஸ்னஸ் குறைந்து விடுகிறது. (சோ-வை கேட்டால் நக்கல் சிரிப்போடு "குழப்புவதுதான் என் வேலை" என்பார்)
"நோக்கு தெரியுமோ? எங்கே பிராமணன்ல அசோக்கா நடிக்கிற கொழந்தை, சாயபு பையனாமே! நல்ல வேளை, நம்ம ஜெயஸ்ரீ யை அவனுக்கு பாக்கலாமோன்னு நெனைச்சுண்டு இருந்தேன்" என்று பட்டு மாமி பேசுவது கேட்கிறது. அசோக்- அத்தனை சமத்தாக நடித்திருக்கிறார். சோவின் முயற்சி முழு வெற்றி அடைய வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் சீரியசாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
மொத்தத்தில் நல்ல முயற்சி. பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு நிறையவே வருத்தம் கலந்த கோபம் வருவது உண்மை.

பாவம் அசோக்,இத்தொடர் முடியும் போது அவர் அவராக இருக்கமாட்டார்.நடிக்கும் பாத்திரம் சில சமயம் ஆளையே மாற்றிவிடும் தகுதிபடைத்தது.
ReplyDelete