Sunday, May 31, 2009

பால்கா தீர்த் - கிருஷ்ண பகவானின் இறப்பிடம்

கிருஷ்ண பகவானின் பாதத்தை பறவையென நினைத்த வேடன் ஒருவன் மறைவிலிருந்து அம்பு எறிய அதுவே பகவானின் இறப்புக்கு காரணமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. சோம்நாத்திற்கு அருகே இருப்பது 'வீராவல்'. வீராவலில் அமைந்து உள்ளது இந்த 'பால்கா தீர்த்' எனப்படும் இந்த இடம். இந்த மரத்துக்கு அருகில் தான் கிருஷனனுக்கு மரணம் சம்பவித்ததாக சொல்லப்படுகிறது.

Thursday, May 21, 2009

குரு ஷிகார் - ஆரவல்லி மலைகளின் எவரெஸ்ட்
























மவுண்ட் அபுவுக்கு செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இந்த "குரு ஷிகார்". ஆரவல்லி மலையின் உச்சாணி கொம்பாக திகழ்கிறது இந்த குரு ஷிகார். சுமார் 5676 அடி உயரத்தில் இருக்கும் இந்த சிகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் உச்சியாக கருதப்படுகிறது. சிகரத்தில் பாதி ஏறும் போதே குளிர் காற்று நம்மை நிலை குலைய செய்யும். சிகரத்தின் உச்சியில் 'குரு தத்தாத்ரேயா' வின் கோவில் இருக்கிறது. 'பிரம்மா, விஷ்ணு, சிவனின் மறு அவதாரமாக குரு தத்தாத்ரேயா கருதப்படுவதால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மற்றபடி சின்ன, சின்ன குகைகள் அங்கங்கே, வந்து செல்பவர்களுக்கு நிழலையும் மன அமைதியையும் தருகிறது. மலையை சுற்றிலும் பச்சை பசேலென்று கள்ளி செடிகள் கத்தை, கத்தையாக முளைத்திருக்கிறது. சிகரத்துக்கு அருகே தொலை நோக்கு மையமும் உள்ளது.

Sunday, May 17, 2009

புளியோதரை முதல் பாப்படி வரை


பெருமாள் கோவில் புளியோதரையை சாப்பிட்டு ருசி கண்ட எனக்கு குஜராத்துக்கு போனதும் நாக்கே செத்து போனது. எங்கு பார்த்தாலும் ரொட்டியும், தொட்டுக்க தாலும், வெரை வெரையாய் சாதமும் வெறுப்பேத்தியது. ஏதோ கெட்டி தயிர் (தஹி) கிடைத்ததால் பிழைத்தேன். எந்த ஹோட்டலுக்கு போனாலும் விரைத்து போன சாதமும் கெட்டி தயிரையும் வாங்கி பிசைந்து அடித்து சமாளித்தேன். குஜராத்திகள் எல்லோரும் ருசி அறியாதவர்களா என்ற சந்தேகம் வந்ததால் அப்படி அவர்கள் என்னதான் சாப்பிடுகிறார்கள் என்று கவனித்தேன். காலை உணவாக (நாஷ்ட்டா) அவர்கள் சாப்பிடும் பஜியாவும், பாப்படியும் எப்படி உள்ளது என்று ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து, காந்தி பிறந்த ஊரான "போர்பந்தர்"இல் ஒரு கை வண்டி கடையில் அமர்ந்தேன். ஒரு நாஷ்ட்டாவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அவர் கை வண்ணத்தை கூர்ந்து கவனித்தேன்.
"பஜியா": நம்ம ஊர் போண்டா தான் குஜராத்தில் பஜியா. பஜியாவுக்கு உள்ளே உருளை கிழங்கு. உருளை கிழங்கு போண்டாவென்று சொல்லலாம். மற்றபடி அதே ருசிதான். தொட்டுக்க பச்சை மிளகாய் சட்டினி. ஒரு பஜியாவை விழுங்கி விட்டு ஒரு முழு பொரித்த பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுகிறார்கள். எட்டிலிருந்து பத்து பஜியா. பிறகு,
"பாப்படி": உருண்டை பிடித்த கார கடலை மாவை ஒரு தேய், தேய்த்து எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள். கிட்ட தட்ட ஒரு அடி ஸ்கேல் நீளத்துக்கு இருக்கிறது. இதில் ஒரு பத்து ஸ்கேல் சாப்பிடுகிறார்கள். நடு, நடுவே ஒமப்பொடியை கொறிக்கிறார்கள். கடைசியில் ஸ்ட்ராங்கான சாயா. இதுதான் குஜராத்திகளின் நாஷ்ட்டா. (இவர்களுக்கு கொலஸ்ட்ரால் சிக்கல் எல்லாம் வராதோ?)
புளியோதரையே சாப்பிட்ட எனக்கு பாப்படியும், பஜியாவும் வித்தியாசமாகவும், ருசியாகவும் இருந்தது என்னவோ உண்மை.

Wednesday, May 13, 2009

ஜில்லுனு சில போட்டோ - வெயிலுக்கு இதமா ...

சும்மா இல்லீங்க, மெய்யாலுமே 44 டிகிரி வெயிலு. இங்க இல்லேங்க... அகமதாபாத்திலதான். கவலை படாதீங்க. இருந்தாலும் நம்ம ஊருல மட்டும் என்ன வாழுதான். அதான். கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கட்டுமேன்னு போட்டிருக்கேன். சும்மா கொஞ்சம் சேம்பிள்தான்.

பாட்டிய பார்த்தீங்களா? மவுண்ட் அபு உச்சியில "கோமுக்கு"ன்னு ஒரு இடம். பசுவின் முகம்னு அர்த்தம். அங்க உட்காந்து கிட்டு ஐஸ் மோர் கொடுக்கிறாங்க.
தொ! தாத்தாவை பாருங்க. ஜில்லுனு லெமன் ஜூஸ் கொடுக்கிறார். இதுவும் மவுண்ட் அபுதான். என்ன குளு-குளுன்னு இருக்கா? இதுக்கே அசந்துட்டா எப்படி?

கீழ பாருங்க. தங்கச்சி பழ ரசம் தருது பாருங்க. அட ஜொள்ளு விட்டது போதும். வாயை மூடுங்க. இது ஏரோப்ளேன் உள்ள. நல்லா தாகத்த தணிச்சுக்குங்க.