Sunday, May 17, 2009
புளியோதரை முதல் பாப்படி வரை
பெருமாள் கோவில் புளியோதரையை சாப்பிட்டு ருசி கண்ட எனக்கு குஜராத்துக்கு போனதும் நாக்கே செத்து போனது. எங்கு பார்த்தாலும் ரொட்டியும், தொட்டுக்க தாலும், வெரை வெரையாய் சாதமும் வெறுப்பேத்தியது. ஏதோ கெட்டி தயிர் (தஹி) கிடைத்ததால் பிழைத்தேன். எந்த ஹோட்டலுக்கு போனாலும் விரைத்து போன சாதமும் கெட்டி தயிரையும் வாங்கி பிசைந்து அடித்து சமாளித்தேன். குஜராத்திகள் எல்லோரும் ருசி அறியாதவர்களா என்ற சந்தேகம் வந்ததால் அப்படி அவர்கள் என்னதான் சாப்பிடுகிறார்கள் என்று கவனித்தேன். காலை உணவாக (நாஷ்ட்டா) அவர்கள் சாப்பிடும் பஜியாவும், பாப்படியும் எப்படி உள்ளது என்று ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து, காந்தி பிறந்த ஊரான "போர்பந்தர்"இல் ஒரு கை வண்டி கடையில் அமர்ந்தேன். ஒரு நாஷ்ட்டாவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அவர் கை வண்ணத்தை கூர்ந்து கவனித்தேன்.
"பஜியா": நம்ம ஊர் போண்டா தான் குஜராத்தில் பஜியா. பஜியாவுக்கு உள்ளே உருளை கிழங்கு. உருளை கிழங்கு போண்டாவென்று சொல்லலாம். மற்றபடி அதே ருசிதான். தொட்டுக்க பச்சை மிளகாய் சட்டினி. ஒரு பஜியாவை விழுங்கி விட்டு ஒரு முழு பொரித்த பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுகிறார்கள். எட்டிலிருந்து பத்து பஜியா. பிறகு,
"பாப்படி": உருண்டை பிடித்த கார கடலை மாவை ஒரு தேய், தேய்த்து எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள். கிட்ட தட்ட ஒரு அடி ஸ்கேல் நீளத்துக்கு இருக்கிறது. இதில் ஒரு பத்து ஸ்கேல் சாப்பிடுகிறார்கள். நடு, நடுவே ஒமப்பொடியை கொறிக்கிறார்கள். கடைசியில் ஸ்ட்ராங்கான சாயா. இதுதான் குஜராத்திகளின் நாஷ்ட்டா. (இவர்களுக்கு கொலஸ்ட்ரால் சிக்கல் எல்லாம் வராதோ?)
புளியோதரையே சாப்பிட்ட எனக்கு பாப்படியும், பஜியாவும் வித்தியாசமாகவும், ருசியாகவும் இருந்தது என்னவோ உண்மை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment