ச்சே ...என்னமா தூங்குறாங்க. அட அடுத்த படத்த பாருங்க, அடாடா....என்ன சுகம், நம்ம ஊருக்கு இதெல்லாம் எப்ப வரும்? ஹ்ம்ம்.... சேலத்துலேந்து நெய்வேலிக்கு ராத்திரி ஒரு மணிக்கு ஒரு லங்கடா பஸ்ஸிலே ஏறி கடைசி சீட்டுல இரண்டு தூங்கு மூஞ்சிகளுக்கு நடுவே சிக்கிகிட்டபோது தோன்றிய ஐடியாக்கள்.
- நம் தோளின் இரண்டு பக்கத்திலும் பழைய காலத்து ராஜாக்களின் கவசத்தில் கூறாக நீட்டிக்கொண்டு இருக்குமே, அதை நன்றாக தீட்டி வைத்து நம் தோள்பட்டையில் பொருத்திக்கொள்ளலாம்.
- நம் தோள் பட்டையில் மூக்குபொடியை தடவி வைத்துக்கொண்டால் அவர்கள் நம் மீது முகத்தை திருப்பி சாயும்போது பொடி மூக்கினுள் ஏறி அவர்களை எழுப்பிவிடும்.
- எலிப்பொறியை தோள்களில் பொருத்திக்கொண்டு அந்த கம்பி வளையத்தை கொக்கியில் மாட்டி வைத்துக்கொண்டு தயாராக இருந்தால், ஆசாமி நம் மீது சாயும்போது அவருடைய காது பொறியில் மாட்டிகொள்ளும். "அவுச்" என்று ஆசாமி எழுந்து விடுவார்.
- எலெக்ட்ரானிக் முறையில் ஒரு சைரன் செய்து தோளில் பொருத்திக்கொண்டால் ஆசாமி சாயும் போது சைரன் 'ஆக்டிவேட்' ஆகி, "வீ..வீ..வீ." என்று அவர் காதுக்குள் அலறும். அடுத்த முறை ஆசாமிக்கு தூக்கமே மறந்து போகும்.
- இதற்கெல்லாம் வசதி இல்லையா? வேறு வழி இன்றி 'ஹோலிபீல்ட்' கணக்காக காதை நன்றாக கடித்து விடுங்கள்.
இந்த கற்பனையெல்லாம் எழுந்து முடிவுக்கு வருவதற்குள் அந்த இரண்டு ஆசாமியும் தன் தலையிலிருந்த எண்ணையை (விளக்கெண்ணையோ, வேப்பெண்ணையோ தெரியவில்லை) நன்றாக சட்டையில் அப்பிவிட்டார்கள்.
No comments:
Post a Comment