Sunday, April 5, 2009

அசார் அண்ணா - அசத்துறீங்கண்ணா!

சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஆரம்பிச்சுபெரிய பிரதட்சணம் கால் பொறியரவெய்யில்ல முடிச்சு கடைசியில் மடப்பள்ளிவந்தவுடன், அதுக்கு மேல கால் ஒரு அடிகூட நகர மாட்டேன்குது. சரின்னுட்டுபாக்கேட்டிலேந்து ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து கவுன்ட்டரில் நீட்டி ஒரு புளியோதரைபொட்டலம் வாங்கினேன். பெருமாள்கோவில் புளியோதரைன்னா கேட்கவாவேணும், சும்மா கார சாரமா நாக்கில் நீர் ஊறவைத்தது. இருந்த பசியில கப, கபன்னுநாலே வாயில் மொத்த புளியோதரையையும் முழுங்கி விட்டு, காகிதத்தை தூக்கிஎறிவதற்காக இடத்தை தேடினேன். கையை அலம்ப வேண்டியதில்லை, ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்களில் தடவி விடலாம். குப்பை கூடையை ஒருவழியாகக் கண்டு பிடித்து விட்டு, காகிதத்தை சுருட்டிப்...
"அட, யார் இது? பார்த்த மாதிரியே இருக்கே!. அட, நம்ம அசார் அண்ணா!"
ஆமாம், நம்ம அசாருதீன் அண்ணாதான். மறந்துட்டீங்களா?என்னங்க நீங்க, இவரமறக்கலாமா! எப்பேர்ப்பட்ட ஆளு இவரு. என்னமா விளையாடுவாரு தெரியுமா? வளைச்சு, வளைச்சு அடிப்பார் - காலரீலேந்து சிக்னல் வர வரைக்கும். டாஸ்போட்ட உடனே சொல்லிடுவார் யார் ஜெயிப்பாங்கங்குறதை. அவ்வளவு பெரியஞானி. ரொம்ப நாளைக்கப்புறம் கழுத்துல, காங்கிரஸ் துண்டும், தலையிலகுல்லாவுமா பார்த்தவுடன் அடையாளம் தெரியலை, அவ்வளவுதான். படத்தைபார்த்தவுடன் அவரிடம் சில கேள்விகளை கேட்கணும்போல ஆசையாய்இருந்தது.
"அசார் அண்ணா, சவுக்கியங்களா? நானே ரொம்ப நாளா கேக்கலாமுன்னு தான்இருந்தேன். என்னடா, மனோஜ் பிரபாகர், சித்து எல்லாம் வந்தாச்சே, இன்னும்உங்கள காணுமேன்னு. நல்ல வேளையா நீங்களே வந்துட்டேங்க. இந்த கெட்-அப்உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு. கிரிக்கட்டு எல்லாம் ஞாபகம்இருக்குங்களா? மறந்துராதீங்க, அடிக்கடி தேவைப்படும். சரியான எடத்துக்கு தான்வந்திருக்கிறீங்க. அரசியலுக்கு தேவையான அத்தனை தகுதியும் உங்களுக்குஇருக்குங்கண்ணா. ஒரே ஒரு வித்தியாசம், அங்க நீங்க கேப்டனா இருந்தீங்க. நீங்க சொன்னத எல்லாரும் கேட்டு வெளையாடி தோத்தாங்க. இங்க அப்படிஇல்லீங்க. கேப்டனே ஜெயிக்கறதுக்கு தயாராயிட்டு இருக்கிறார். அப்புறம்,பிரச்சாரம் எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? ஸ்போர்ட்ஸ் சானலுக்குபேட்டி கொடுக்கற நெனப்புல,
"வி பேட்டட் பேட்லி, வி போல்ட் பேட்லி, வி பீல்டட் பேட்லி" என்று சால்ஜாப்புசொல்லிடாதீங்க. எங்க ஊருக்கு வந்தீங்கன்னா நெறைய பேரு இருக்காங்க, உங்களுக்கு சொல்லி கொடுப்பாங்க.
"வீழ்வது நாமாய் இருந்தாலும்.." என்பது போல நிறைய சரக்கு வச்சிருக்காங்க. 'சரக்கு'ன்னதும் ஏதோ மாதிரி பாக்காதீங்க. சும்மா எதுகை, மோனைக்காகசொல்றது. அண்ணா, உங்க பழைய பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? அவங்களையும் உங்க பக்கம் இழுத்து போட்டுருங்க, ஐந்தாவது அணி (ஐந்தாம்படை இல்லேங்க) ஆரம்பிச்சுடலாம். 'ஹன்சி க்ரோனியே'ன்னு உங்களுக்கு ஒருபிரண்டு, பாவம் ஆக்சிடன்ட்டுல இறந்து போயிட்டாரு, இருந்திருந்தாருன்னாஉங்களுக்கு துணையா கட்சியில சேர்ந்திருப்பார். உங்க கட்சியில தான் வெளிநாட்டு காரருக்கு மதிப்பு அதிகம்னு சொன்னாங்க. மனசை தளர விடாதீங்க, இன்னும் 'கிப்ஸ்', 'மார்க் வாக்'ன்னு ரெண்டு மூணு பேர் தேருவாங்க. நம்மபங்காளிய கேட்டீங்கன்னா மொத்த டீமையே அனுப்புவாங்க. ஆனா, ஒரே ஒருஅட்வைசுங்க. உங்களை நம்பி சீட்டு கொடுத்திருக்காங்க, பாவம், ஜெயிக்கவச்சிருங்க. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மனசுல வச்சுக்காதீங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா?"

No comments:

Post a Comment