Monday, April 13, 2009

அயர்ன் - விமர்சனம்

", தேவா! சரக்கு என்னாச்சு? பத்துறமா கொண்டு வந்தியா?
", அதுவா" தேவா 'கிடு, கிடு' என ஓடிப்போய் ஒரு குழந்தைய தூக்குகிறார்.
"ஏய், என்ன பண்ணுற?" எதையும் காதில் வாங்காமல் குழந்தையின் முதுகுப்பக்கத்திலிருந்து ஒரு சி.டியை எடுத்து காட்டுகிறார் தேவா.
"ஹையா, சரக்கு வந்தாச்சு" என்று கூச்சலிட்டு கொண்டு ஓடுகிறார்கள். இருட்டுப்பகுதிக்கு சென்று திருட்டுத்தனமாக சி.டியை காப்பி எடுக்கிறார்கள். இதன் நடுவில் போலீஸ் தொந்தரவுகள் என ஆரம்பமே விறு,விறுப்பாக இருக்கிறது.
"அப்பாடா, 'பஞ்ச கல்யாணி' சி.டியை எப்படியோ தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டான் நம்ம தேவா. இந்த படத்த நம்ம கூட்டாளிங்களுக்கு எல்லாம் போட்டு காமிக்கணும். 'பஞ்ச கல்யாணி' நம்ம தெய்வண்டா" என்று தங்கள் தொழில் பக்தியை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
தேவா, முதல் தெருவில் அயர்ன் கடை வைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக வில்லன் அடுத்த தெருவில் அயர்ன் கடை வைத்திருக்கிறார். இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டியும், சண்டையும் நிலவுகிறது. தெருத்தெருவாக இருவரும் சென்று, துணி,மணிகளை வாங்கிக்கொண்டு வந்து அயர்ன் செய்து கொடுக்கிறார்கள். இதில் துணிகளை வாங்கும்போது 'கோட்-வேர்ட்' சொல்லிவிட்டு கிழிந்து போன பழைய துணியை காண்பிப்பார் தேவா. அதன் மறு பாதியை வீட்டுக்காரர் காண்பிப்பார். பின் துணியை முகர்ந்து பார்த்து விட்டு தான் துணியை கொடுப்பார் துணிக்கு சொந்தக்காரர். இந்த டெக்னிக்குகளை எல்லாம் தெரிந்து கொள்ளாத வில்லன் குறுக்கு வழியில் தேவாவின் துணிகளை பிடுங்க முயற்சி செய்யும் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்கின்றது. தேவா, ஒரு கொள்கையுடன் அயர்ன் செய்பவர். அவரிடம் கோவணத்துணியை கொடுத்து அயர்ன் செய்ய சொல்லும்போது அவர் பேசும் வசனங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது. அயர்ன் பெட்டிக்கு தேவையான கரியை வெளி நாட்டிலிருந்து கடத்தி வருவதற்கு அவர் கையாளும் உத்திகள் சூப்பர்ப். ஆப்பிக்காவில் அவர் அடிக்கும் லூட்டி கல, கலப்பாக உள்ளது. கதாநாயகி அஞ்சலையுடன் கரியை வாரி பூசிக்கொண்டு டூயட் பாடுகிறார். காதுக்கு இனிமையாகவும், கண்ணுக்கு கருமையாகவும் இருக்கிறது. தள்ளு வண்டி சேசிங் பிரமாதமாக படமாக்க பட்டுள்ளது. ஒளிப்பதிவு பிரமாதம். ஒரு சந்தேகம், கஸ்டம்ஸ் அதிகாரிக்கு தேவாதான் அயர்ன் செய்து தருகிறார் போலும். ஒவ்வொரு முறையும் தேவாவை தப்பிக்க வைக்கிறார். கடைசியில் கஸ்டம்ஸிலேயே தேவாவுக்கு அயர்ன் செய்யும் வேலையை வாங்கி தருகிறார்.
அயர்ன்-சுட சுட காதுல பூ!

No comments:

Post a Comment