Tuesday, April 14, 2009

படம் புடிக்கிறோம் பாருங்க!

நமக்கு சிறு பிராயத்துலேந்தே போட்டோக்ராபின்னா உசுரு. நாலங்க்ளாசுலையே தீப்பெட்டிய வச்சுக்கிட்டு பயலுகள (புள்ளைங்கள) எல்லாம் படம் புடிச்சுக்கிட்டே இருப்பேன். அப்படி ஒரு இது, போட்டோ கிராபி மேல. கொஞ்சம் வசதி, வாய்ப்பு வந்ததும் ஒரு எஸ்.எல். ஆர் காமிரா செகண்ட் ஹாண்டுல வாங்கினேன். சொம்மா சொல்ல கூடாது. சூபர் காமிரா மாமு. நான் நீலகிரி ட்ரெக்கிங் போக சொல்ல, இமாலயா ட்ரெக்கிங் போக சொல்ல ரொம்ப எல்ப்பா இருந்துச்சு. 'கபக்கு, கபக்குன்னு' எல்லா சீனரியையும் படம் புடிச்சுடுவேன். நம்ம பிரான்ட்சுங்க ரொம்ப எல்ப்பு எனக்கு. மல மேலேந்து குதிக்கற மாதிரி, ஜம்ப்பு பண்ணுற மாதிரி, உள்ளங்கையில சூரியன வச்சிருக்கற மாதிரி, அப்பிடி-இப்பிடின்னு ரூவாய காலி பண்ணுவேன். ஆனா ஒன்னு, எல்லாம் நம்ம சந்தோசத்துக்கு தான. இன்னா நான் சொல்லுறது? இப்போ கூட ஒரு கேனான் (அட, கேனை இல்லீங்க) டிஜிட்டல் காமிரா வச்சுருக்கிறேன். சும்மா சொல்ல கூடாது, இன்னாமா படம் புடிக்குது தெரியுமா. நீங்களே பாருங்கோ, அந்த சைடுல, பச்ச பசேல்னு வயலு, காவா எல்லாம் எப்பிடி இருக்கு பாருங்கோ. தோ, மேல பாருங்கோ, தென்னை மரத்துக்கு நடுவுல இன்னாமா போஸ் குடுக்குது பாரு அந்த கோயிலு. சொன்னா நம்ப மாட்டீங்கோ, வருசா வருசம் நான் காமிராவும் கையுமா படம் புடிக்கிறதுக்குன்னே ஊர் சுத்த கெளம்பிடுவேன். அவ்வளோ உசிரு படம் புடிக்கரதுல. ஒரு தபா, ஊட்டி போயிருந்தேன். அப்போ, இந்த பொட்டனிக்கல் கார்டன் தெரியுமா, அங்க.... சொல்லும் போதே ஜொள்ளு வருதுங்கோ, நம்ம 'திவ்ய பாரதி' தெரியுமிலீங்கோ, அதாங்கோ பாவம் மாடியிலேந்து தொபகடீர்னு விழுந்து உசுர உட்டுச்கிங்களே அந்த புள்ள தான். அடா, அடா, ஏன்னா அம்சகள, சும்மா ரெண்டு அடி தூரத்துலேந்து படம் புடிச்சேன்கோ. பத்தரமா வெச்சுருக்கேன். உங்களுக்கெல்லாம் காட்ட மாட்டேன். கனவுலேயே ஜொள்ளு விடுங்கோ. என்ன, இப்பவே கண்ண மூடிக்கிட்டீங்க? ஓஹோ, கனவா! சரி, சரி நான் அவீட்டாயிக்கிறேன். வர்ட்டா?

No comments:

Post a Comment