Sunday, November 1, 2009
Saturday, October 17, 2009
கர-கர, மொர-மொர, ட்டப்....
இப்போ ரவா லாடு, மைசூர்பா, முறுக்கு, தேன்குழல், ஓலை பகோடா, முந்திரி கேக் இதெல்லாம் எப்படி பண்ணலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி என்ன பண்ணலாம் என்பதை பார்த்து விடலாம்.
முதலில் மைசூர்பா: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மெல்ல அழுத்தாமல் மைசூர்பாவை எடுக்கவும். பிறகு எடுத்த மைசூர்பாவை யாரும் பார்க்காத வண்ணம் லேசாக தூக்கி, நாக்கில் வைத்து முதல் பதத்தை ருசித்து விடவும். பின்பு (இப்போ யார் பார்த்தாலும் பரவாயில்லை) மைசூர்பாவை நாக்கால் உள்ளிழுத்து முன் பற்கள் அதிகம் படாமல் உதடுகளால் கடித்து உமிழ்நீரைக்கொண்டு கரைக்கவும். கரைசலை மெல்ல நாக்கினுள் ஓடவிட்டு, விழுங்கவும். இப்போது தொண்டைகுழாய் முழுவதும் இனிப்பு பரவுவதை கண்களை மூடிக்கொண்டு ரசித்து ருசிக்கவும்.
அடுத்து ரவா லாடு: ரவா லாடையும் அழுத்தாமல் மூன்று விரல்களால் எடுக்கவும். அதை லேசாக மூக்கருகில் கொண்டு சென்று, ஏலக்காய் வாசனையை முகரவும். பின்பு வாயை தேவைக்கேற்ப திறந்து கொண்டு ரவா லாடை பற்களுக்கு இடையில் வைத்து லேசாக கடிக்கவும். கடிக்கும் போது ரவா லாடு தூள்கள் வெளியில் வந்து விழாமல் இருக்க மிக லாவகமாக பிடிக்கவும். வாய் கொள்ளும் அளவுக்கு மட்டும் ரவா லாடை கடிக்கவும். இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளுக்குள்ளேயே நாக்கை உபயோகப்படுத்தி அசை போடவும். மிக முக்கியமாக உங்களுக்கு அருகில் ஜோக்கு பேர்வழிகள் இல்லாமல் பார்த்து கொள்ளுவது நல்லது. ஏனெனில், அவர் அடித்த ஜோக்குக்கு, நீங்கள் "ப்ப்ர்ர்.." என்று சிரிக்க போக எதிரில் நிற்பவர் மூஞ்சியில் விபூதி அபிஷேகம் நடக்க வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை.
அடுத்தது முறுக்கு, ஓலை பகோடா, தேன் குழல்: இவற்றை விரல்களில் எடுத்து ரசனையோடு தின்றால் நாகரீகமாக இருக்கும். பறக்காவெட்டி போல் உள்ளங்கையில் அள்ளி, வாய்க்குள் கொட்டிக்கொண்டு, கர-கர-கரவென்று கான்கிரீட் மெஷின் போல அரைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. மற்றபடி எங்கே சாப்பிடலாம் என்பதை அதனதன் ருசியை வைத்து, டி.வீக்கு முன்னால் அமர்ந்தபடியோ, போகும்போது-வரும்போதோ, "ரெபிரிஜிறேட்டரை" திறந்து பார்த்து எதுவும் கிடைக்காமல் போகும்போது தின்பதற்கோ, நிஜமாகவே ருசியாக இருப்பின், ஆர-அமர பலகாரங்களோடு சேர்த்தோ சாப்பிடலாம்.
இனிமேல் செய்முறை பற்றி பார்ப்போம்.
என்னத்துக்கு இந்த அனாவசிய வேலை எல்லாம். பேசாமல் வீட்டில் செய்த பலகாரங்களை சத்தம் போடாமல் தின்று விட்டு அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.
Friday, October 16, 2009
Sunday, October 11, 2009
யம்மாடியோவ் - 40 லட்சமா..........!!!!!!!!!!!!!!
Sunday, October 4, 2009
சிவகாசிக்கே வேட்டு....
Monday, September 28, 2009
ஞானப்பழம்
Sunday, September 20, 2009
ரெங்குடுவும், ராக்காயி மெஸ்ஸும்
சில சமயங்களில் உலகத்தின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்வதற்கு வெகு நேரங்கள் ஆகும்.
இப்படியாக ரெங்குடுவின் சென்னை வாழ்க்கை பல வித மறக்க முடியாத நிகழ்வுகளுடன் பறந்தது. சென்னையை பொறுத்தவரை ஒரு மாபெரும் உண்மையை தெரிந்து கொண்டேன். இங்கே ஐந்நூறு ரூபாய் சம்பளத்திலும் உல்லாசமாக இருக்கலாம், ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அழுது கொண்டும் இருக்கலாம். சாய்ஸ் நமது கையில்தான் இருக்கிறது. இரண்டு வருட அனுபவங்களுடன் சென்னைக்கு "பய், பய்" சொல்லி விட்டு நெய்வேலிக்கு வந்து சேர்ந்தேன். ஒரு காஸ்மோபோலிட்டன் சிட்டியிலிருந்து, மினி இந்தியாவிற்கு வந்த விஷயங்கள் வரும் பதிவுகளில்.
Saturday, September 19, 2009
Friday, September 18, 2009
Thursday, September 10, 2009
நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்
ஆறேகால் மணி காட்சிக்கு ஐந்தரை மணிக்கு அவசரம் அவசரமாக போய் சேர்ந்தேன். தியேட்டர் வாசலில் இரண்டு பேர் வெளிப்புறத்தை ரொம்ப கவலையாக பார்த்துக் கொண்டிருக்கவே யார் என்று உற்று பார்த்தேன். வேறு யாருமில்லை, அவர்கள்தான் தியேட்டர் முதலாளியும், மேனேஜரும். சற்றே உள்ளே நுழைந்து எட்டி பார்த்தேன். யாரோ இரண்டு பேர் தியேட்டர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள். "திரைக்கு வந்து சில நாட்களே ஆன " படத்துக்கு ஏற்பட்ட நிலைதான். எங்கள் ஊரில் இதெல்லாம் சகஜம். சரி விஷயத்துக்கு வருகிறேன். ஒரு வழியாக நாற்பது, ஐம்பது பேர் தேற, படத்தை திரையிட்டார்கள்.
பிரிதிவிராஜ், ஒரு ஐ.டி கம்பெனியின் சி.ஈ.ஓ கணக்காக பிசினெஸ் க்ளாசில் பிளைட்டில் வருகிறார். அருகில் அமர்ந்து வந்தவர் சும்மா இல்லாமல் இவரிடம் அளவளாவ உடனே பிளாஷ் பேக்கிற்கு போகிறது கதை. மீண்டும், மீண்டும், மீண்டும், ஒரு காலேஜ் கதை. காலேஜில் படிப்பைத்தவிர மற்ற எல்லா விஷயங்களும் நடக்கிறது. பிரிதிவிராஜ் டான்ஸ் ஆடுகிறார், சண்டை போடுகிறார், நரம்பு புடைக்க வீர வசனங்கள் பேசுகிறார், வழக்கம் போல எதிரிகளை சம்பாதித்து கொள்கிறார். எம்.எல்.ஏ மகளாக பிரியா மணி ஆண் குரலில் வீராப்பு பேசுகிறார். பின்னர் பிரிதிவிராஜ் எப்போதோ பொறுக்கி எடுத்த தன் போட்டோவை பார்த்ததும் காதல் கொள்கிறார். இதற்கிடையில் இரண்டு பாடல்கள், மூன்று சண்டைகள், காமடி என்ற பெயரில் லொள்ளு சபா ஜீவா சொதப்பல்கள். வேஸ்ட் செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் காலேஜுக்குள்ளே இரண்டு குரூப். மாறி, மாறி ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவார்கள். இரண்டு குரூப்புக்கு நடுவில் பீ. வாசுவின் மகன் சக்தி, திடீரென்று சமரச முயற்சி செய்து தோற்கிறார். காலேஜ் எலக்ஷன் நடத்த முடிவு செய்யப்பட, ப்ரிதிவிராஜை எதிர்த்து பிரியாமணியை நிறுத்துகிறது எதிர் கும்பல். உடனே ப்ரிதிவிராஜுக்கு கோபம் வரவே காதல், மோதலில் முடிகிறது. மோதல் முத்தி கலவரம் ஏற்படுகிறது. இதற்கு இடையில் திடீரென்று சக்தி இறந்து கிடக்கிறார். சக்தியின் அப்பாவாக வரும் பாக்கியராஜ் குமுறி அழுகிறார். (பாக்கியராஜ் கையை உருட்டி, உருட்டி பேசும்போதெல்லாம் லொள்ளு சபாவில் ஜீவா செய்யும் மிமிகிரிதான் ஞாபகம் வருகிறது. இது ஜீவாவின் வெற்றி.)
சக்தியின் எட்டாவது (அது என்ன எட்டாவது?) நினைவு நாளை கொண்டாட மீண்டும் நண்பர்கள் காலேஜில் ஒன்று சேர்கிறார்கள். இந்த விழவிற்குதான் எலக்ஷன் போதே காணாமல் போன (படிப்பை பாதியிலேயே கை விட்ட) பிருதிவிராஜ் பிளைட்டில் வந்து சேருகிறார். என்னதான் 'இண்டிகோ' ஏர்லயன்ஸ் 'சீப்' பான பிளைட் விட்டிருக்கிறது என்பதற்காக இப்படியா?
விழா முடிந்தவுடன் யாரோ பிரிதிவிராஜை கொலை செய்ய முயற்சி செய்ய திடீரென்று கதை நம்ம ரமணன் சொல்லும் வானிலை அறிக்கை போல திசை மாறுகிறது. வில்லன் யார் என்று நாம் குழம்பும்போது சற்றும் சம்பந்தம் இல்லாமல் 'புர்க்கா' அணிந்த உடன் படித்த தோழியை காட்டுகிறார்கள். அவர் ஒரு புதிய கதை ஒன்றை விட்டு சக்தியுடன் அழகான பாடல் ஒன்றை பாடுகிறார். பிறகு தான் பிரிதிவிராஜை கொலை செய்ய முயன்றதன் காரணத்தை விளக்குகிறார். அதன்படி ப்ரிதிவிராஜ்தான் சக்தியை கொலை செய்தார் என்று புது கதை விடுகிறார். "ஐயோ" "தலை சுத்துதே" என்று நீங்கள் ஓடுவது தெரிகிறது.
எனக்கு ஒரு சந்தேகம், இந்த கதையை டைரக்டர் எப்படி ப்ரோடுசருக்கு புரிய வைத்தாரோ, எனக்கு புரிய வில்லை.
ஒரு சந்தோஷமான விஷயம். காலேஜில் ஒரே ஒரு காட்சியில் H2O
என்று பாட சம்பந்தமாக எழுதுகிறார் மனோபாலா.
பழைய 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை நம்பி இதை பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
Tuesday, September 8, 2009
வானத்தில் ஒரு வட்டம்
Tuesday, September 1, 2009
ஓரம் கட்டெய்................
Sunday, August 9, 2009
ரெங்குடுவும், ராக்காயி மெஸ்ஸும் - இரண்டாம் பாகம்
எங்கள் ரூமில் 'லட்சுமி நாராயணன்' மட்டும் இதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டான். அவனுக்கு ஒன்பது மணி அடித்தால் தூக்கம் வந்து விடும். அதே போல் கடிகாரம் அலாரம் அடித்தால் விழிப்பு வந்துவிடும். 'சடக்' என்று கடிகாரத்தை தட்டி விட்டு துண்டை (டவல்) எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளியல் அறைக்கு ஓடி விடுவான். எங்களுக்கு அவனை சீண்டி பார்ப்பதில் பேரானந்தம். அவன் நன்றாக தூங்கிய பிறகு கடிகாரத்தில் பதினொரு மணிக்கு அலாரத்தை செட் பண்ணி விட்டு விளக்கை அணைத்து படுத்து தூங்குவது போல பாவனை செய்வோம். வழக்கம் போல அலாரம் அடித்த வுடன் அவன் எழுந்து கடிகாரத்தை தட்டி விட்டு துண்டை கட்டி கொண்டு நேராக குளிக்க போய்விடுவான். சிறிது நேரத்துக்கு பிறகுதான் அவனுக்கு விஷயமே விளங்கும். அவன் திரும்பி வரும்போதும், நாங்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடி கொண்டிருப்போம். தூக்கத்திலேயே கொஞ்ச நேரம் புலம்பி விட்டு மீண்டும் தூங்க போய்விடுவான். நாங்கள் சீட்டு விளையாட்டை முடித்து விட்டு ரூமை விட்டு வெளியில் வந்து ஆளுக்கு ஒரு பால் வாங்கி குடித்து விட்டு மீண்டும் வந்து விளையாட்டை துவங்குவோம்.
பாட்டு கச்சேரியை ரோட்டில் செய்தால் என்ன ஆகும்?
என்ன ஆகும் என்பதை "ஆத்தாடி பாவாட காத்தாட" என்று பாடிய விஸ்வேஸ்வரனை கேட்டால் தெரிந்து விடும். விரைவில் தெரிந்து கொள்வோம்.
(டெலிபோன் லயனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக 'ராக்காயி மெஸ்' நிகழ்ச்சிகளை எழுத முடியவில்லை என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)
(தொடரும்)
Wednesday, July 22, 2009
ரெங்குடுவும், ராக்காயி மெஸ்ஸும்
அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க? அதனால உண்மைய சொல்லிடறேன். இந்த மாதிரி மெஸ்ஸு இருக்கணும்னு எனக்கு ஆசைதான். ஆனா எண்பத்தி நாலாம் வருஷத்துல, அதுவும் திருவொத்தியூர்ல ஐந்நூறு ரூபா ஸ்டைபண்டுல இந்த மாதிரியெல்லாம் முடியுமா. ஒரு மாசம் சாப்பிட்டா இருநூத்தி எண்பது ரூபா தான் ஆகும். அதுதான் ராக்காயி மெஸ்ஸு.
காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூ வில் ஈஸ்வரன் கம்பெனியில் வேலை கிடைச்ச வுடனேயே ஒரு பெட்டியும், பாய் படுக்கையும் தூக்கிக்கொண்டு, நான், லட்சுமி நாராயணன், கொங்கு நாட்டு வேந்தன் (ரவி சந்திரனுக்கு நாங்கள் வைத்த பட்ட பெயர்) மூவரும் ராத்திரி திருவள்ளுவர் பேருந்தில் புறப்பட்டு போய், விடிந்ததும், விடியாததுமாய் ஈஸ்வரன் கம்பெனிக்கு போய்ச்சேர்ந்தோம். தூங்கி வழிந்த மூஞ்சியுடன் வந்த எங்களை இனிய ? முகத்தோடு வரவேற்ற கம்பெனியின் டிசைன் டிபார்ட்மென்ட் தலைவர் கிருஷ்ணமூர்த்தி எங்களுக்கு தங்க ஏற்பாடு செய்து தருமாறு சக ஊழியர்களை கேட்க, ஒரு வழியாக திருவொத்தியூரில் ராஜேஸ்வரி ஓட்டலில் வந்து ஐக்கியமானோம். அன்று முதல் எங்களுக்கு போஜன சேவை செய்தது ராக்காயி மெஸ். காலையில் இரண்டு இட்டலி, வடைகறி, ஒரு செட் பூரி. 'இன்னும் ரெண்டு வைக்காட்டா?' என்ற கேள்வியில் ராக்காயி அக்காவின் பரிவு, மூக்கை சிந்திய கையோடு இட்டலிகளை நமக்கு பரிமாறும் அழகு, வடை மாவை அரைத்து கொண்டிருக்கும்போதே, மாவை லேசாக நக்கிவிட்டுப் போகும் ஜிம்மி (தொத்த நாய்) என்று தினம், தினம் கொண்டாட்டம்தான். இரண்டு மாதத்தில் ராக்காயி மெஸ் போரடித்துப்போகவே தேவி மெஸ்ஸில் புது அக்கவுண்ட் ஓபன் பண்ணினோம். தேவி மெஸ்ஸில் கொஞ்சம் டீசென்ட்டாக இருக்கும். ஆனால் தரையில்தான் உட்க்கார்ந்து சாப்பிடவேண்டும், டேபிள் கிடையாது. சம்மணம் போட்டு முட்டை தோசைக்காக காத்திருக்கும்போது, "தேனா..... தம்பிங்களுக்கு முட்டை தோசை வையி" என்று தேவி அக்கா ஆர்டர் செய்ததும், சற்று நேரத்தில் அருகில் உட்க்கார்ந்துள்ள வெங்கடேஸ்வரனின் சம்மணம் போட்ட தொடை ஆடத்துவங்கும். உடனே 'தேனா' வருவதை உணர்ந்து கொள்வோம்.('தேனா', சுமார் பதினாறு வயது தேவதை) தலையை தூக்கினால் தரும-அடி விழும் என்பதால் கடைசிவரை, கால் கொலுசையே பார்த்து ஜொள்ளு விடுவோம். தேவி மெஸ்ஸில் மதிய உணவு கிடையாது என்பதால், ஞாயிற்று கிழமை மதிய உணவு மீண்டும் ராக்காயி மெஸ்ஸில். ஒரு முறை சாப்பிடும்போது வாய்க்குள் ஏதோ நெருட, எடுத்து பார்த்தேன். நாலு செ.மீ. நீளத்தில் ஒரு செத்துப்போன தேள். பார்த்த வுடன் குமட்டிக்கொண்டு வர அடித்து புரண்டு ஓடி வந்தேன். அன்றோடு ராக்காயி மெஸ்சுக்கு ஒரு பெரிய முழுக்கு போட்டேன்.
Saturday, July 11, 2009
க்ளிக்...க்ளிக்...க்ளிக்.............
"அண்ணே, எங்க வெள்ளையும், சள்ளையுமா கெளம்பிட்டீங்க?"
"அடேய்... கரிகட்டை மூக்கா...
இங்கையும் வந்திட்டியா, ஒரு மனுஷன், நிம்மதியா, காத்தாட, கல கலன்னு, காலைல எங்கடா போவான்? கொக்க,மக்கா வவுத்த வலி தாங்க முடியலடா...."
"பதினொரு பேரு, மூணு மணி நேரம், அவுங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சாங்க... அதுல ஒருத்தன் என்ன ரொம்ப நல்லவன்னு.... சொல்லிட்டாம்மா..."
"இந்த சென்னை மாநகரத்திலே, இப்படிப்பட்ட ஒரு பில்டிங்குல, கதவுக்கு பக்கத்துல, அந்த கம்பத்துல லேசா கால தூக்கி உச்சா அடிக்க்கலாம்னா உடுரானுகளா? இங்கையும் வந்து போட்டோ புடிக்க வந்துட்டானுக....
Tuesday, June 23, 2009
தோனியின் புலம்பல்
இப்பத்தான் நாம தோத்துப்போனதுக்கு மன்னிப்பு கேட்டோம், அதுக்குள்ளே அடுத்த சோதனை வந்துருச்சே.... இந்த நேரம் பாத்து நம்ம பங்காளி வேற ஜெயிச்சு தொலைஞ்சுட்டாங்களே. இதுக்கு வேற மறுபடியும் மன்னிப்பு கேட்கணுமே. இறைவா!....
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....
Thursday, June 18, 2009
தோனி Vs கேரி
ஐ.பீ.எல் பந்தயங்களில் தொடர்ந்து விளையாடியதால் இந்திய வீரர்கள் சோர்வடைந்து விட்டார்கள். இதுதான் கேரி கிர்ஸ்டனின் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணம் குறித்த கருத்து. கேரி ஏதோ சொல்லப்போய், வந்தது வினை. எதுடா சாக்கு என்று கிளம்பி வந்து விட்டார்கள் பத்திரிகையாளர்கள். வெறும் வாயை மெல்பவர்களுக்கு வெற்றிலை பாக்கோடு சுண்ணாம்பையும் தடவித்தந்தால் விடுவார்களா? அப்படித்தான் ஆனது கேரி Vs தோனி கதை. கேரி ஒன்று சொல்ல, தோனி அதை மறுத்து பேச, ஒரே களேபரம். இது தானே நமக்கு சுவாரஸ்யம். மற்றபடி இந்தியா ஜெயித்தால் என்ன? தோற்றால் நமக்கு என்ன?
சரி, கேரி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? விளையாட்டு வீரர்கள் சோர்வடைய மாட்டார்களா? அவர்கள் பணத்தை கொட்டினால் விளையாடத்தயாராக இருக்கலாம். BCCI சோர்வடையாமல் கோடிகளை அள்ளி கொட்டிகொள்ளும் இயந்திரமாக இருக்கலாம், ஆனால் வீரர்கள் இயந்திரம் அல்லவே. மனிதர்கள் தானே. உடனே தில்ஷான், காலிஸ், டிவிலியர்ஸ், கைல் இவர்களெல்லாம் விளையாட வில்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் காலரியில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் சில ஈனப்பிறவிகள். ஒரு பேச்சுக்காக கணக்கிட்டு பார்ப்போம். ஐ. பீ.எல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் உலகக்கோப்பையில் விளையாடுகிறார்கள்? அதேபோல் மற்ற நாட்டு வீரர்களுள் எத்தனை பேர் அந்தந்த நாட்டுக்காக விளையாடுகிறார்கள்? இந்தியாவுக்காக விளையாடும் அத்தனை பேருமே ஐ.பீ.எல் போட்டியில் அயராமல் விளையாடியவர்கள். இனிமேலும் கோடிகளுக்காக ஆசைப்பட்டு கொண்டு போட்டிகளில் விளையாடினால் இந்த தோல்விகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். BCCI என்ற முதலையின் பேராசை ஒழிந்தால்தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் தொடரும்.
தோல்விக்கு தோனி மன்னிப்பு கோர வேண்டுமா?
இது பெரிய வேடிக்கையாக இருக்கிறது. தோனியின் இந்த மன்னிப்பு கோரிக்கை அவரது சொத்துக்களை ரசிகர்களின் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் உதவலாம். மற்றபடி மன்னிப்பு கேட்பது விளையாட்டில் ஏற்படும் தோல்விகளுக்கு அவசியமே இல்லை. கேப்டன் விளையாட்டு மைதானத்தில் சில தவறுகள் செய்யலாம். ஒருவர் செய்யும் தவறிலும், சரியிலும்தான் விளையாட்டில் சுவாரஸ்யமே ஏற்படுகிறது. தவறே செய்யாமல் விளையாட வேண்டும் என்றால் மனிதர்களுக்கு பதிலாக, ரோபோக்களை வைத்துக்கொண்டு விளையாடலாம். இந்த அடிப்படை கூட தெரியாதவர்கள் விளையாட்டை பார்க்கத்தேவையிலை. கம்பியூட்டர் முன் அமர்ந்து செஸ் விளையாடலாம். மிஸ்டர் கூல், என்று பெயர் பெற்ற தோனி மன்னிப்பு கேட்டார் என்பது, அவர் மிஸ்டர் ஹாட் ஆகிவிட்டார் என்பதையே காட்டுகிறது. அவரை மிஸ்டர் ஹாட்டாக ஆக்கிய பெருமை, BCCI, பத்திரிகைகள் மற்றும் முட்டாள் ரசிகர்களையுமே சேரும்.
Monday, June 15, 2009
Sunday, May 31, 2009
பால்கா தீர்த் - கிருஷ்ண பகவானின் இறப்பிடம்
Thursday, May 21, 2009
குரு ஷிகார் - ஆரவல்லி மலைகளின் எவரெஸ்ட்
மவுண்ட் அபுவுக்கு செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இந்த "குரு ஷிகார்". ஆரவல்லி மலையின் உச்சாணி கொம்பாக திகழ்கிறது இந்த குரு ஷிகார். சுமார் 5676 அடி உயரத்தில் இருக்கும் இந்த சிகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் உச்சியாக கருதப்படுகிறது. சிகரத்தில் பாதி ஏறும் போதே குளிர் காற்று நம்மை நிலை குலைய செய்யும். சிகரத்தின் உச்சியில் 'குரு தத்தாத்ரேயா' வின் கோவில் இருக்கிறது. 'பிரம்மா, விஷ்ணு, சிவனின் மறு அவதாரமாக குரு தத்தாத்ரேயா கருதப்படுவதால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மற்றபடி சின்ன, சின்ன குகைகள் அங்கங்கே, வந்து செல்பவர்களுக்கு நிழலையும் மன அமைதியையும் தருகிறது. மலையை சுற்றிலும் பச்சை பசேலென்று கள்ளி செடிகள் கத்தை, கத்தையாக முளைத்திருக்கிறது. சிகரத்துக்கு அருகே தொலை நோக்கு மையமும் உள்ளது.
Sunday, May 17, 2009
புளியோதரை முதல் பாப்படி வரை
பெருமாள் கோவில் புளியோதரையை சாப்பிட்டு ருசி கண்ட எனக்கு குஜராத்துக்கு போனதும் நாக்கே செத்து போனது. எங்கு பார்த்தாலும் ரொட்டியும், தொட்டுக்க தாலும், வெரை வெரையாய் சாதமும் வெறுப்பேத்தியது. ஏதோ கெட்டி தயிர் (தஹி) கிடைத்ததால் பிழைத்தேன். எந்த ஹோட்டலுக்கு போனாலும் விரைத்து போன சாதமும் கெட்டி தயிரையும் வாங்கி பிசைந்து அடித்து சமாளித்தேன். குஜராத்திகள் எல்லோரும் ருசி அறியாதவர்களா என்ற சந்தேகம் வந்ததால் அப்படி அவர்கள் என்னதான் சாப்பிடுகிறார்கள் என்று கவனித்தேன். காலை உணவாக (நாஷ்ட்டா) அவர்கள் சாப்பிடும் பஜியாவும், பாப்படியும் எப்படி உள்ளது என்று ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து, காந்தி பிறந்த ஊரான "போர்பந்தர்"இல் ஒரு கை வண்டி கடையில் அமர்ந்தேன். ஒரு நாஷ்ட்டாவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அவர் கை வண்ணத்தை கூர்ந்து கவனித்தேன்.
"பஜியா": நம்ம ஊர் போண்டா தான் குஜராத்தில் பஜியா. பஜியாவுக்கு உள்ளே உருளை கிழங்கு. உருளை கிழங்கு போண்டாவென்று சொல்லலாம். மற்றபடி அதே ருசிதான். தொட்டுக்க பச்சை மிளகாய் சட்டினி. ஒரு பஜியாவை விழுங்கி விட்டு ஒரு முழு பொரித்த பச்சை மிளகாயை கடித்து சாப்பிடுகிறார்கள். எட்டிலிருந்து பத்து பஜியா. பிறகு,
"பாப்படி": உருண்டை பிடித்த கார கடலை மாவை ஒரு தேய், தேய்த்து எண்ணையில் பொறித்து எடுக்கிறார்கள். கிட்ட தட்ட ஒரு அடி ஸ்கேல் நீளத்துக்கு இருக்கிறது. இதில் ஒரு பத்து ஸ்கேல் சாப்பிடுகிறார்கள். நடு, நடுவே ஒமப்பொடியை கொறிக்கிறார்கள். கடைசியில் ஸ்ட்ராங்கான சாயா. இதுதான் குஜராத்திகளின் நாஷ்ட்டா. (இவர்களுக்கு கொலஸ்ட்ரால் சிக்கல் எல்லாம் வராதோ?)
புளியோதரையே சாப்பிட்ட எனக்கு பாப்படியும், பஜியாவும் வித்தியாசமாகவும், ருசியாகவும் இருந்தது என்னவோ உண்மை.
Wednesday, May 13, 2009
ஜில்லுனு சில போட்டோ - வெயிலுக்கு இதமா ...
பாட்டிய பார்த்தீங்களா? மவுண்ட் அபு உச்சியில "கோமுக்கு"ன்னு ஒரு இடம். பசுவின் முகம்னு அர்த்தம். அங்க உட்காந்து கிட்டு ஐஸ் மோர் கொடுக்கிறாங்க.
தொ! தாத்தாவை பாருங்க. ஜில்லுனு லெமன் ஜூஸ் கொடுக்கிறார். இதுவும் மவுண்ட் அபுதான். என்ன குளு-குளுன்னு இருக்கா? இதுக்கே அசந்துட்டா எப்படி?
கீழ பாருங்க. தங்கச்சி பழ ரசம் தருது பாருங்க. அட ஜொள்ளு விட்டது போதும். வாயை மூடுங்க. இது ஏரோப்ளேன் உள்ள. நல்லா தாகத்த தணிச்சுக்குங்க.
Sunday, April 19, 2009
எலெக்ஷன் டிஷ்யூம், டிஷ்யூம்...
கண்ணுசாமி: இன்னாப்பா, என்னாமோ புதுசா சொல்லுற மாதிரி சொல்லற. ஒனக்கு எதுனாச்சும் ஒளுங்கா வெளங்கிருக்கா?
முன்சாமி: ரொம்ப ரவ்சு உடாத. நீயே சொல்லு, நம்ம தலைவர் சொல்றது எதுனாச்சும் வெளங்கிச்சா?
கண்ணுசாமி: நேரா மேட்டருக்கு வா, சொம்மா அரைச்ச மாவையே அரைக்காத.
முன்சாமி: தலைவரு திடீர்னு இப்படி ஒரு ஸ்டேட்மெண்டு உட்டுருக்குராரே. நீ இன்னா நெனைக்குற?
கண்ணுசாமி: இந்த லொள்ளுதானே வாணான்றது, தலைவரு தெனம் ஒரு ஸ்டேட்மெண்டு உட்டுகுனு தான் இருக்காரு. நீ எத்த சொல்ற?
முன்சாமி: அட, லேட்டஸ்ட்டா ஒன்னு உட்டுருக்கார்ல, அதத்தான்பா சொல்லுறேன்.
கண்ணுசாமி: ஒ... இந்த பிரபாகரன் நம்ம பிரெண்டு - அப்படீன்னு சொன்னாரே அத்த சொல்லுறியா?
முன்சாமி: அதாம்பா, இப்பத்தான் கூட்டணி உள்ள இருக்கற பிரச்சனையெல்லாம் கரெக்ட் பண்ணி வச்சிருக்கோம், இப்போ போய் தலீவரு இந்த ஸ்டேட்மெண்டு உடுனுமா?
கண்ணுசாமி: நீ வளக்கம்போல தப்பா புரிஞ்சுகின, தலீவரு சொன்னது "கேப்டன் பிரபாகரன"
முன்சாமி: இன்னது, கேப்டனா?..... அவுரு நமக்கு எதிர் சைடுல ரவ்சு உட்டுகுனு அலையிறாரு. நீ இன்னான்னா கேப்டன் நம்ம தலீவருக்கு நண்பன்னு சொல்லுற. ஒரே கொழப்பமா இருக்கே.
கண்ணுசாமி: அதான் அரசியலு. கேப்டன் தனியா நிக்கிராருல்ல....
முன்சாமி: ஆமா, அதான் ஒலகத்துக்கே தெரியுமே. நாம கூட அவரு தைரியத்த பாரட்டுநோமுல்ல.
கண்ணுசாமி: தைரியமாவது, ஒண்ணாவது. இவரு வாங்கப்போற ஓட்டெல்லாம் யாரோடது தெரியுமா? ஆளுங்கட்சி மேல வெறுப்பு வந்து, கொளம்பி போய் இருக்குராங்கல்ல, அவங்களோட ஓட்டு. இந்த ஓட்டெல்லாம் அம்மா கையில உளுந்துராம கேப்டன் லவுட்டிக்கிரார்ல்ல.
முன்சாமி: அம்மாடியோவ்...
கண்ணுசாமி: அதுக்கு தான் "பிரபாகரன் என் நண்பர்னு" நம்ம தலீவரு ஸ்டேட்மெண்டு உட்டுகிராறு. இப்ப தெர்தா?
Thursday, April 16, 2009
சிலு, சிலுவென வெயில்
Tuesday, April 14, 2009
படம் புடிக்கிறோம் பாருங்க!
Monday, April 13, 2009
அயர்ன் - விமர்சனம்
"ஒ, அதுவா" தேவா 'கிடு, கிடு' என ஓடிப்போய் ஒரு குழந்தைய தூக்குகிறார்.
"ஏய், என்ன பண்ணுற?" எதையும் காதில் வாங்காமல் குழந்தையின் முதுகுப்பக்கத்திலிருந்து ஒரு சி.டியை எடுத்து காட்டுகிறார் தேவா.
"ஹையா, சரக்கு வந்தாச்சு" என்று கூச்சலிட்டு கொண்டு ஓடுகிறார்கள். இருட்டுப்பகுதிக்கு சென்று திருட்டுத்தனமாக சி.டியை காப்பி எடுக்கிறார்கள். இதன் நடுவில் போலீஸ் தொந்தரவுகள் என ஆரம்பமே விறு,விறுப்பாக இருக்கிறது.
"அப்பாடா, 'பஞ்ச கல்யாணி' சி.டியை எப்படியோ தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டான் நம்ம தேவா. இந்த படத்த நம்ம கூட்டாளிங்களுக்கு எல்லாம் போட்டு காமிக்கணும். 'பஞ்ச கல்யாணி' நம்ம தெய்வண்டா" என்று தங்கள் தொழில் பக்தியை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
தேவா, முதல் தெருவில் அயர்ன் கடை வைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக வில்லன் அடுத்த தெருவில் அயர்ன் கடை வைத்திருக்கிறார். இருவருக்கும் தொழில் ரீதியாக போட்டியும், சண்டையும் நிலவுகிறது. தெருத்தெருவாக இருவரும் சென்று, துணி,மணிகளை வாங்கிக்கொண்டு வந்து அயர்ன் செய்து கொடுக்கிறார்கள். இதில் துணிகளை வாங்கும்போது 'கோட்-வேர்ட்' சொல்லிவிட்டு கிழிந்து போன பழைய துணியை காண்பிப்பார் தேவா. அதன் மறு பாதியை வீட்டுக்காரர் காண்பிப்பார். பின் துணியை முகர்ந்து பார்த்து விட்டு தான் துணியை கொடுப்பார் துணிக்கு சொந்தக்காரர். இந்த டெக்னிக்குகளை எல்லாம் தெரிந்து கொள்ளாத வில்லன் குறுக்கு வழியில் தேவாவின் துணிகளை பிடுங்க முயற்சி செய்யும் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்கின்றது. தேவா, ஒரு கொள்கையுடன் அயர்ன் செய்பவர். அவரிடம் கோவணத்துணியை கொடுத்து அயர்ன் செய்ய சொல்லும்போது அவர் பேசும் வசனங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது. அயர்ன் பெட்டிக்கு தேவையான கரியை வெளி நாட்டிலிருந்து கடத்தி வருவதற்கு அவர் கையாளும் உத்திகள் சூப்பர்ப். ஆப்பிக்காவில் அவர் அடிக்கும் லூட்டி கல, கலப்பாக உள்ளது. கதாநாயகி அஞ்சலையுடன் கரியை வாரி பூசிக்கொண்டு டூயட் பாடுகிறார். காதுக்கு இனிமையாகவும், கண்ணுக்கு கருமையாகவும் இருக்கிறது. தள்ளு வண்டி சேசிங் பிரமாதமாக படமாக்க பட்டுள்ளது. ஒளிப்பதிவு பிரமாதம். ஒரு சந்தேகம், கஸ்டம்ஸ் அதிகாரிக்கு தேவாதான் அயர்ன் செய்து தருகிறார் போலும். ஒவ்வொரு முறையும் தேவாவை தப்பிக்க வைக்கிறார். கடைசியில் கஸ்டம்ஸிலேயே தேவாவுக்கு அயர்ன் செய்யும் வேலையை வாங்கி தருகிறார்.
Thursday, April 9, 2009
கொஞ்சம் சிரிங்க - ப்ளீஸ்
தலைவர்: யோவ், அடக்கி வாசி, அந்த செருப்பு நாம இலவசமா தந்ததுதான், ஒரு வாரத்துலயே பிஞ்சுபோச்சுன்னு கோவத்துல எரியுறான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
Sunday, April 5, 2009
அசார் அண்ணா - அசத்துறீங்கண்ணா!
"அட, யார் இது? பார்த்த மாதிரியே இருக்கே!. அட, நம்ம அசார் அண்ணா!"
ஆமாம், நம்ம அசாருதீன் அண்ணாதான். மறந்துட்டீங்களா?என்னங்க நீங்க, இவரமறக்கலாமா! எப்பேர்ப்பட்ட ஆளு இவரு. என்னமா விளையாடுவாரு தெரியுமா? வளைச்சு, வளைச்சு அடிப்பார் - காலரீலேந்து சிக்னல் வர வரைக்கும். டாஸ்போட்ட உடனே சொல்லிடுவார் யார் ஜெயிப்பாங்கங்குறதை. அவ்வளவு பெரியஞானி. ரொம்ப நாளைக்கப்புறம் கழுத்துல, காங்கிரஸ் துண்டும், தலையிலகுல்லாவுமா பார்த்தவுடன் அடையாளம் தெரியலை, அவ்வளவுதான். படத்தைபார்த்தவுடன் அவரிடம் சில கேள்விகளை கேட்கணும்போல ஆசையாய்இருந்தது.
"அசார் அண்ணா, சவுக்கியங்களா? நானே ரொம்ப நாளா கேக்கலாமுன்னு தான்இருந்தேன். என்னடா, மனோஜ் பிரபாகர், சித்து எல்லாம் வந்தாச்சே, இன்னும்உங்கள காணுமேன்னு. நல்ல வேளையா நீங்களே வந்துட்டேங்க. இந்த கெட்-அப்உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு. கிரிக்கட்டு எல்லாம் ஞாபகம்இருக்குங்களா? மறந்துராதீங்க, அடிக்கடி தேவைப்படும். சரியான எடத்துக்கு தான்வந்திருக்கிறீங்க. அரசியலுக்கு தேவையான அத்தனை தகுதியும் உங்களுக்குஇருக்குங்கண்ணா. ஒரே ஒரு வித்தியாசம், அங்க நீங்க கேப்டனா இருந்தீங்க. நீங்க சொன்னத எல்லாரும் கேட்டு வெளையாடி தோத்தாங்க. இங்க அப்படிஇல்லீங்க. கேப்டனே ஜெயிக்கறதுக்கு தயாராயிட்டு இருக்கிறார். அப்புறம்,பிரச்சாரம் எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? ஸ்போர்ட்ஸ் சானலுக்குபேட்டி கொடுக்கற நெனப்புல,
"வி பேட்டட் பேட்லி, வி போல்ட் பேட்லி, வி பீல்டட் பேட்லி" என்று சால்ஜாப்புசொல்லிடாதீங்க. எங்க ஊருக்கு வந்தீங்கன்னா நெறைய பேரு இருக்காங்க, உங்களுக்கு சொல்லி கொடுப்பாங்க.
"வீழ்வது நாமாய் இருந்தாலும்.." என்பது போல நிறைய சரக்கு வச்சிருக்காங்க. 'சரக்கு'ன்னதும் ஏதோ மாதிரி பாக்காதீங்க. சும்மா எதுகை, மோனைக்காகசொல்றது. அண்ணா, உங்க பழைய பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? அவங்களையும் உங்க பக்கம் இழுத்து போட்டுருங்க, ஐந்தாவது அணி (ஐந்தாம்படை இல்லேங்க) ஆரம்பிச்சுடலாம். 'ஹன்சி க்ரோனியே'ன்னு உங்களுக்கு ஒருபிரண்டு, பாவம் ஆக்சிடன்ட்டுல இறந்து போயிட்டாரு, இருந்திருந்தாருன்னாஉங்களுக்கு துணையா கட்சியில சேர்ந்திருப்பார். உங்க கட்சியில தான் வெளிநாட்டு காரருக்கு மதிப்பு அதிகம்னு சொன்னாங்க. மனசை தளர விடாதீங்க, இன்னும் 'கிப்ஸ்', 'மார்க் வாக்'ன்னு ரெண்டு மூணு பேர் தேருவாங்க. நம்மபங்காளிய கேட்டீங்கன்னா மொத்த டீமையே அனுப்புவாங்க. ஆனா, ஒரே ஒருஅட்வைசுங்க. உங்களை நம்பி சீட்டு கொடுத்திருக்காங்க, பாவம், ஜெயிக்கவச்சிருங்க. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மனசுல வச்சுக்காதீங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா?"